தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டம்
முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டம் நடந்தது.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயற்குழு கூட்டம் முத்தையாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ரோபிபிரபாகரன் தலைமையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், மைக்கேல் ராஜ், முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் அர்ஜூனன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் மாரி செல்வம் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, செயலாளர் முருகன், மாவட்ட மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி ,செயலாளர் ஜரீனா பானு உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறக்கூடிய ஸ்மார்ட் சிட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.