தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இளைஞர் அணி செயலாளர் பரத் வரவேற்றார். மாநகர் மாவட்ட தலைவர் முரளி முன்னிலை வகித்தார். ஜனநாயக சமூகநல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் சிறப்புரையாற்றினார். முடிவில் மாணவர் அணி செயலாளர் சரண் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது, சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story