தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நித்திரவிளையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

மத்திய பா.ஜனதா அரசு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களின் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி வருவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் ரூபன் ஆன்டணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நித்திரவிளை சந்திப்பில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story