தமிழக வாழ்வுரிமை கட்சி செயற்குழு கூட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சி செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரோபிபிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் ராஸிக் முஸம்மில், மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி பணி குறித்து கருத்துரை வழங்கினார். திருச்செந்தூர் ஒன்றிய பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்து கிருஷ்ணன், முருகன், ஸ்பிக்நகர் பகுதி தலைவர் சந்தியாகு, பகுதி செயலாளர் வெட்க்காளி முத்து, உடன்குடி ஒன்றிய தலைவர் இளவரசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் முத்தையாபுரம் பல்க் சந்திப்பு நிறுத்தத்தில் நின்று செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story