தமிழ்நாடு ஆணழகன் போட்டி


தமிழ்நாடு ஆணழகன் போட்டி
x

கலவையில் தமிழ்நாடு ஆணழகன் போட்டி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட பாடி பில்டர்ஸ், மதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து தமிழ்நாடு ஆணழகன் போட்டியை கலவை தனியார் திருமண மண்டபத்தில் நடத்தினர். கலவை சச்சிதானந்த சுவாமி தலைமை தாங்கினார். கலவை ஸ்டார் ஜிம் கிளப் வேலு வரவேற்றார். இப்போ போட்டியில் தமிழ் நாடு முழுவதும் இருந்து 232 பேர் கலந்து கொண்டனர். இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் முதலிடமும், சென்னையை சேர்ந்த கோபால் இரண்டாம் இடமும் பெற்றனர். இவர்களுக்கு ஆற்காடு தொழிலதிபரும், மாவட்ட தி.மு.க. பொருளாளருமான ஏ.வி.சாரதி பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். கலவை சச்சிதானந்த சாமிகள் அனைத்து ஆணழகன்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார்.


Next Story