தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்க கூட்டம்


தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்க கூட்டம்
x

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்க கூட்டம்

மதுரை


மதுரையில் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தாமோதரன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் மகுடேஸ்வரன், பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக அரசு புதிதாக வெளியிட்ட அரசாணை எண் 152-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகளில் "டி" பிரிவு பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும், ஏற்கனவே "டி" பிரிவு பணியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்க துணைச் செயலாளர் துரை கண்ணன் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் நல சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story