தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை
போளூர்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் போளூர் ஒன்றியத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதியில் தமிழக முதல்-அமைச்சர் கூறியபடி சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்,
குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்,
பணிக்கொடையாக ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும் சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story