தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் இன மக்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற பாடுபட்டு வருகிறேன். விரைவில் இந்த கோரிக்கை மத்திய, மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக ஆதிதிராவிட எம்.எல்.ஏ.க்களையே நியமிக்கின்றனர். ஆதிதிராவிட எம்.எல்.ஏ.க்களுக்கு வேறு எந்த ஒரு முக்கிய அமைச்சர் பதவிகளை கொடுப்பதில்லை.
இ்வ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story