தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வழிபடும் கோவில் திருவிழா ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, மாவட்ட செயலாளர் நாகராஜ சோழன், தொழிற்சங்க நிர்வாகி மகேந்திரன், மாநகர செயலாளர் துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.