கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஆய்வு


கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஆய்வு
x

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஆய்வு செய்தார்.

கரூர்

ஆய்வு

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளரும், வணிக வரித்துறை ஆணையருமான தீரஜ்குமார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஈராண்டு ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டிற்கான ஈராண்டு ஆய்வில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரிவுகளில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்கான குறை நிவர்த்தி அறிக்கைகள் தொடர்பாகவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டப்பணிகள் முன்னேற்றம் தொடர்பாக அனைத்துத்துறை தலைமை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டத்தில் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பதிவறையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் மாவட்ட கலெக்டரால் பராமரிக்கும் ரகசிய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நலத்திட்ட உபகரணங்கள் வழங்கல்

இதனைத்தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் 19 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 86 ஆயிரத்து 500 மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினார். 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 840 மதிப்பில் பிரெய்லி ரீடர், 11 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 49 மதிப்பிலான திறன் பேசிகளையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் என மொத்தம் 37 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 76 ஆயிரத்து 389 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உபகரணங்களை வழங்கினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.


Next Story