ராஜராஜசோழன் ஆட்சியில் தமிழகம் ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது - கவர்னர் ஆர்.என்.ரவி


ராஜராஜசோழன் ஆட்சியில்  தமிழகம் ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது - கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 3 Nov 2022 11:09 AM IST (Updated: 3 Nov 2022 11:10 AM IST)
t-max-icont-min-icon

அவரது ஆட்சியில் 'தமிழகம்' ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது.என தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1037-வது சதய விழா இரண்டு நாள் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்கள்.

மேலும்,அவரது ஆட்சியில் 'தமிழகம்' ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது.என தெரிவித்துள்ளார்.


Next Story