தமிழ்நாடு மாநில ஓபன் சதுரங்க போட்டி
புதுக்கோட்டையில் தமிழ்நாடு மாநில ஓபன் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் 70-வது தமிழ்நாடு மாநில ஓபன் சதுரங்க போட்டி தொடங்கியது. மாமன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் போட்டியினை தொடங்கி வைத்தார். போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த போட்டி வரும் 18-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக தலைவர் ராமச்சந்திரன், செயலர் கணேசன், துணைத்தலைவர் அடைக்கலவன் உள்பட பலர் செய்திருந்தனர். நேற்று நடந்த போட்டியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வீரர்களுடன் விளையாடினார்.
Related Tags :
Next Story