தேசிய ஆக்கி இறுதி போட்டியில் தமிழக அணி-மத்திய பிரதேச அணியுடன் மோதல்
தேசிய ஆக்கி இறுதி போட்டியில் தமிழக அணி-மத்திய பிரதேச அணியுடன் மோதல்
ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கு இடையே தேசிய அளவிலான ஆக்கி போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள சிந்தடிக் ஆடுகளத்தில் நடந்து வருகிறது. அதில் நேற்று அரை இறுதி போட்டிகள் நடந்தன. முதலில் நடந்த போட்டியில் தமிழக அணி-ஐதராபாத் அணியுடன் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் தமிழக அணி வீரர்கள் 7 கோல்கள் போட்டு வெற்றி பெற்றனர். ஐதராபாத் அணி வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. அந்த அளவிற்கு தமிழக அணி வீரர்கள் அதிகம் செலுத்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பின்னர் நடந்த 2-வது அரை இறுதி போட்டியில் மத்திய பிரதேச அணி, டெல்லி அணியுடன் மோதியது. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதி போட்டியில் தமிழக அணியை எதிர்த்து மத்திய பிரதேச அணி இன்று (வியாழக்கிழமை) மதியம் விளையாடுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்டேட் வங்கி ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.