தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நெல்லை டவுன் வாகையடி முக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் மதுபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுடலைராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் காலாவதியான பிற்போக்கு மதவாத குலத்தொழில் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நெல்லை பகுதி செயலாளர் நாராயணன், கவுன்சிலர் முத்துசுப்பிரமணியம், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தரராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் முருகன் கண்ணா, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இளையராஜா, திராவிடர் தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story