தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கக்கோரியும், மோசடி நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஆல்பர்ட் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக வடக்கு மண்டல தலைவர் நரேஷ்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஆன்லைனில் ரம்மி விளையாடி இளைஞர்கள் லட்சக்கணக்கான பணத்தையும் இழந்து உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். ரம்மி விளையாட்டினால் மற்றொரு நபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அதற்கு தடை விதிக்க வேண்டும். நிதிநிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுகின்றன. அந்த நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story