தமிழ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:45 AM IST (Updated: 12 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தமிழ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ் தேசிய கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கையா தலைமை தாங்கினார். செயலாளர் ஜோசப் சந்தியாகு முன்னிலை வகித்தார். கட்சி தலைவர் தமிழ்நேசன், மாவட்ட தலைவர் நிக்கோலஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட வேண்டும். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் மாவட்ட மகளிர் அணி தலைவர் பஞ்சவர்ணம், மாநில இளைஞரணி செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story