கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை


கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
x

காட்பாடி பகுதியில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

வேலூர்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காட்பாடி பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு மல் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

காட்பாடி கிளித்தான்பட்டறை ராகவேந்திரா சுவாமி மிருத்திகா பிருந்தாவனத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பிருந்தாவனத்துக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

இதே போல காட்பாடி, கழிஞ்சூர், வஞ்சூர், சேனூர், காந்திநகர் ஆகிய பகுதியில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மூலவர் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு அதிகாலை முதலே அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக வள்ளிமலை தேரடியில் உள்ள வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.


Next Story