தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம்


தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
x

நெல்லையில் தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் மாரித்துரை முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்கள் சரவணன், சிந்தா, சுப்பிரமணியன், சிறுபான்மைபிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் வருகிற 28-ந் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை கூட்டணியில் கேட்டு பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story