தமிழ் புலிகள் கட்சி மாநாடு


தமிழ் புலிகள் கட்சி மாநாடு
x

பாளையங்கோட்டையில் தமிழ் புலிகள் கட்சி மாநாடு நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் மாநில சுயாட்சி மீட்பு மாநாடு நடைபெற்றது.

நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமை தாங்கினார். கரும்புலி குயிலி பேரவை மாவட்ட செயலாளர் தச்சை மாடத்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வளவன், வக்கீல் அணி செயலாளர் அறிவரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தமிழ் புலிகள் கட்சி மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிதி செயலாளர் பெரியார் தமிழ்மணி நன்றி கூறினார்.


Next Story