தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சாதியினர் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மாசு ஏற்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி விடியல் வீரபெருமாள், பொருளாளர் பேரறிவாளன், தெற்கு மாவட்ட செயலாளர் தாஸ், வடக்கு மாவட்ட துணை தலைவர் பீமாராவ், இளம்புலிகள் மாவட்ட செயலாளர் தமிழரசு, விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் கணேசன், நகரச் செயலாளர் காளி ராஜ், ஜெய் பீம் தொழிலாளர் சங்கத் தலைவர் செம்பகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் கத்தார் பாலு, பால்சிங், முத்துக்குமார் ஆகியோர் பேசினார்கள்.
Related Tags :
Next Story