போடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ் மரபு சொற்பொழிவு நிகழ்ச்சி
போடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ் மரபு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி
தமிழ் இணையக்கல்வி கழகத்தின் சார்பில் போடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க்கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரையின் 2-வது கட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார். பத்மஸ்ரீ விருது பெற்றவரும், தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழு உறுப்பினருமான நர்த்தகி நடராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியின்போது பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சிறப்பான கேள்விகள் கேட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, கல்லூரி முதல்வர் வசந்தநாயகி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story