முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்ச்சாரல் விழா


முண்டியம்பாக்கம்    அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்ச்சாரல் விழா
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்ச்சாரல் விழா கொண்டாடப்பட்டது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்ச்சாரல் -22 என்ற விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் குந்தவிதேவி தலைமை தாங்கி, குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாணவர் மன்றம், முன்னாள் மாணவர் கூட்டமைப்பு ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது. துணை முதல்வர் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளர் செந்தில்குமார், நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் சத்தியபெருமாள் வரவேற்றார். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் உறவே? நட்பே? என்கிற தலைப்பில் மாணவர்களின் பட்டிமன்றம் நடந்தது. இதற்கு நடுவராக டாக்டர் ராஜாமூர்த்தி செயல்பட்டார். மேலும் தமிழ்ச்சாரல் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கலலூரி முதல்வர் குந்தவிதேவி, சிறப்பு விருந்தினர் கவிஞர் அறிவுமதி ஆகியோர் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினர். விழாவில் டாக்டர் சாந்தி தம்பிதுரை, நிர்வாக அதிகாரி கவிஞர் சிங்காரம், டாக்டர் பாமாலை, தமிழ் மன்ற செயலாளர் தீனா, கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் தமிழ் மன்ற செயலாளர் தீபிகா நன்றி கூறினார்.


Next Story