தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்தது
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்பாடத்தேர்வு மிக எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று தமிழ்பாட தேர்வு நடந்தது.இந்த தேர்வு மிக எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கூறினர். இது குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மாணவி ஆயிஷா:-
தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. 1 மதிப்பெண் வினாக்களில் 3 மட்டும் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டு இருந்தது. 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்களாகவே இருந்தது. 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.
மாணவி ஸ்வீட்டி:-
1 மதிப்பெண் வினாக்களில் 3 மட்டும் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டது. மற்ற வினாக்கள் அனைத்தும் மிக எளிதாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து விட்டேன். 85 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும்.
எளிதில் தேர்ச்சி பெறலாம்
மாணவி ரம்யாஸ்ரீ:-
1 மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து வந்தது. மற்ற வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறலாம். திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களே அதிகம் வந்திருந்தது. 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுவிடுவேன்.
மாணவர் சுஜா அகமது:-
தமிழ் பாடத்தேர்வு மிக, மிக எளிமையாக இருந்தது. 95 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 1 மதிப்பெண் வினாக்களில் 3 பாடத்துக்குள் இருந்து கேட்கப்பட்டது. புத்தகத்தை முழுமையாக படித்து இருந்தேன். இதனால் அனைத்துக்கும் விடையளித்து விட்டேன்.
மாணவர் ஆகில்:-
2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. 1 மதிப்பெண் வினாக்கள் பாடத்தில் உள்ளே இருந்து கேட்கப்பட்டது. 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும். அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விட்டதால் மனது சந்தோஷமாக உள்ளது.