"தமிழ்நாடு கலாசாரம் மிகவும் பிடித்துபோனது..."நாகர்கோவில் வாலிபரை மணந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பட்டதாரி பெண்...!


தமிழ்நாடு கலாசாரம் மிகவும் பிடித்துபோனது...நாகர்கோவில் வாலிபரை மணந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பட்டதாரி பெண்...!
x

தமிழ்நாடு கலாசாரம் மிகவும் பிடித்துபோனது என்று நாகர்கோவில் வாலிபரை மணந்த பிலிப்பைன்ஸ் பட்டதாரி பெண் கூறியுள்ளார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் தேசமணிநகர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் குணசீலன். இவரது மனைவி மெர்சி. இவர்களது மகன் ஜெமி ரென்ஸ்விக்(வயது 25). இவர் ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி ஜமீலா மற்றும் மெரிட்டா ஜமீலா தம்பதியரின் மகள் லாலைன். இவர் எம்.பி.ஏ. பட்டதாரி.

இந்த நிலையில் லாலைனிக்கும், ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் கடல் கடந்தது காதல் ஏற்பட்டது. இறுதியில் அவர்கள் இருவீட்டரின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது.

இந்த கடல் கடந்த காதல் திருமணத்தில் முடிந்த ருசிகர அனுபவம் குறித்து மணமகளிடம் கேட்டபோது, அவர் கூறுகையில்:-

எனக்கு சிறுவதில் இருந்தே இந்திய நாட்டின் மீது ஒரு தனிமரியாதை உண்டு. இங்குள்ள கலாசாரம், பழக்க வழக்கம் எனக்கு பிடிக்கும். அதனை நான் கன்னியாகுமரிக்கு வந்தபோது உணர்ந்தேன். தமிழ்நாடு கலாசாரமும், இங்குள்ள மக்களின் அன்பான அரவணைப்பும் எனக்கு மிகவும் பிடித்துபோனது என்று கூறினார்.


Next Story