தமிழ்நாடு நில அளவை களப் பணியாளர்கள் தர்ணா


தமிழ்நாடு நில அளவை களப் பணியாளர்கள் தர்ணா
x

தமிழ்நாடு நில அளவை களப் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு நில அளவை களப் பணியாளர்களின் 26 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொன்னையா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அப்பாஸ் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் செல்லத்துரை வரவேற்றார். கோரிக்கையை விளக்கி தெட்சிணாமூர்த்தி பேசினார். களப் பணியார்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் செய்திடும் களப்பணியாளர்களின் ஒட்டு மொத்த பணியை கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியை மட்டும் ஆய்வுக்குட்படுத்தும் கோரிக்கையை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.


Next Story