ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு வழங்கப்படும் தாமிரபரணி குடிநீர் குறைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு வழங்கப்படும் தாமிரபரணி குடிநீர் வினியோக பாதிப்பை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு வழங்கப்படும் தாமிரபரணி குடிநீர் வினியோக பாதிப்பை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து தினமும் குழாய் மூலம் தாமிரபரணி தண்ணீர் பெறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் வினியோகம் செய்து வந்தது.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி சரியான அளவு தண்ணீரை வழங்காமல் குடிநீர் வடிகால் வாரியம் குறைந்த அளவு தண்ணீரை வழங்குவதால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் ஆலோசனை
மேலும் 3 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கப்பட்ட குடிநீர்அளவு குறைக்கப்பட்டதால் 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நகர்மன்ற சேர்மன் தங்கம் ரவிக்கண்ணன், துணைத்தலைவர் செல்வமணி, நகர்மன்ற ஆணையாளர் ராஜமாணிக்கம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். மேலும் ஒப்பந்த அடிப்படையில் சரியான அளவு குடிநீரை வழங்க வேண்டும். அப்போது தான் குடிநீர் வினியோகம் தட்டுப்பாடு இல்லாமல் சீராக கிடைக்கும் என வலியுறுத்தினர். இந்த அடிப்படையில் இனிவரும் காலங்களில் சரியான அளவு குடிநீர் ஒப்பந்தத்தின்படி வழங்குகிறோம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.