தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்


தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்
x

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற தனி சிறப்பு தீர்மானத்தை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்மொழிய உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. வழிமொழிந்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கருணாநிதி பிறந்தநாள்

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்டத்தில் ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள், திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் சிறப்பாக நடத்த வேண்டும்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது, தஞ்சையில் அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தது, 74 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று நிகழ்வாக மேட்டூர் அணையை மே மாதம் 24-ந் தேதி திறந்து வைத்தது, களிமேடு கிராமத்திற்கு நேரில் வந்து மின்சாரம் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தது, சென்னையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலையை திறந்து வைத்தது ஆகியவற்றிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், முன்னாள் நகரசபை தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Next Story