பிளஸ்-1 தேர்வில் தஞ்சை மாவட்டம் 90.16 சதவீதம் தேர்ச்சி


பிளஸ்-1 தேர்வில் தஞ்சை மாவட்டம் 90.16 சதவீதம் தேர்ச்சி
x

பிளஸ்-1 தேர்வில் தஞ்சை மாவட்டம் 90.16 சதவீதம் தேர்ச்சியை பெற்றது

தஞ்சாவூர்
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் 13 ஆயிரத்து 909 மாணவர்களும், 14 ஆயிரத்து 832 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 741 பேர் தேர்வு எழுதினர்.

இவர்களில் 11 ஆயிரத்து 808 மாணவர்களும், 14 ஆயிரத்து 105 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 913 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் 84.89 சதவீதமும், மாணவிகள் 95.10 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டம் 90.16 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசு பள்ளிகள்

இதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் 57.48 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள் 81.36 சதவீதமும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 87.94 சதவீதமும், அரசு பள்ளிகள் 84.18 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.85 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள் 99.16 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.90 சதவீதமும், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் 91.18 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.








Next Story