தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்


தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
x

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

பேரவை கூட்டம்

கொரடாச்சேரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம் கொரடாச்சேரியில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை தாங்கினார். பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி

அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணி நீண்ட ஆண்டுகளுக்கு பின் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனாலும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் நாகை, திருவாரூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி மற்றும் பல நகரங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தற்போது திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

விரைவுபடுத்த வேண்டும்

இதன் காரணமாக கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவும் ஏற்படுகிறது. தற்போது பெய்த மழையில் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தினந்தோறும் விபத்துகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

எனவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி திருவாரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிட தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணியை விரைவுபடுத்தி விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story