பழனி அருகே தலைக்குப்புற கவிழ்ந்த டேங்கர் லாரி


பழனி அருகே தலைக்குப்புற கவிழ்ந்த டேங்கர் லாரி
x
தினத்தந்தி 21 Jun 2023 2:30 AM IST (Updated: 21 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே டேங்கர் லாரி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

திண்டுக்கல்

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தார் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை, நாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 40) ஓட்டினார். பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் ரமேஷ் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான லாரியில் இருந்து தார் கொட்டியது. அந்த தார் முழுவதும் சாலையோரத்தில் வழிந்தோடியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ராட்சத கிரேன் மூலம் டேங்கர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story