தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு
கழிவு நீரை பாலாற்றில் வெளியேற்றிய தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது தனியார் தொழிற்சாலை ஒன்று கழிவு நீரை சுத்திரிப்பு செய்யாமல் பாலாற்றில் வெளியேற்றி வருவது தெரியவந்தது. அதன் காரணமாக அந்த தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க கலெக்டருக்கு அவர் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மின் இணைப்பினை துண்டிக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீர் அல்லது திடக்கழிவுகளை நிலத்திலோ, நீர் நிலைகளிலோ வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடுதல் உத்திரவு அளிக்கப்பட்டு, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தியதற்கான அபராதத் தொகை விதிக்கப்படும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story