ரூ.71¾ லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி
ரூ.71¾ லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்தார்.
திருப்பத்தூர்
வாணியம்பாடியை அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட நெக்குந்தி ஊராட்சியில் முதல்- அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கே.ஆர்.சாலை முதல் நெக்குந்தி வழியாக மோதகுட்டை துரைசாமி வட்டம் வரை 1.7 கிலோமீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி முன்னிலையில், கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கிவைத்தார்.
மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், ஒன்றியக் குழு உறுப்பினர் உமாகன்ரங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story