தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்
தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்
தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் இருந்து வேட்டைக்காரனிருப்பு வரை செல்லும் சாலை உள்ளது. தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம் உள்ளிட்டவைகளுக்கு இந்த சாலை வழியாக தான் பொதுமக்கள் செல்ல வேண்டும். கடந்த 1 ஆண்டுக்கு மேலாக சாலையில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை வர்த்தகர்கள், பொதுமக்கள் புகார் மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையை விரைவில் தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.