நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.350 கோடி கடன் வழங்க இலக்கு- கலெக்டர் அம்ரித் தகவல்


நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.350 கோடி கடன் வழங்க இலக்கு- கலெக்டர் அம்ரித் தகவல்
x

நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.350 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.350 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு பெற்று தருவது மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உதவிகுழு உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு கடன் உதவிகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரம் மேம்பட செய்ய தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.300 கோடி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டதில், ரூ.372 கோடி கடன் வழங்கப்பட்டு மாநில அளவில் நீலகிரி மாவட்டம் 2-ம் இடம் பெற்றது.

ரூ.350 கோடி கடன் வழங்க இலக்கு

மேலும் 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூ.350 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் புதிய சுய உதவி குழுக்களை உருவாக்க வேண்டும் மற்றும் கடன் பெற தகுதி வாய்ந்த சுய உதவி குழுக்களை கண்டறிந்து தர மதிப்பீடு செய்து வங்கிகடன் இணைப்பு பெற்றுத்தர சம்மந்தப்பட்ட பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டிற்கான இலக்கினை எட்ட சம்மந்தப்பட் அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, உதவி திட்ட அலுவலர்கள் தேவராஜ் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story