ரூ.2½ கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு


ரூ.2½ கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு
x

ரூ.2½ கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தீபாவளி பட்டாசு விற்பனை தொடங்கியது. மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனரும், கூட்டுறவு சங்க இணைபதிவாளருமான நந்தகுமார், துணை பதிவாளர் ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், பண்டகசாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, குடியாத்தம் மற்றும் ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம் மற்றும் தலைமையகத்தில் உரிமம் பெற்று பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு பட்டாசு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.


Next Story