ரூ.60 லட்சத்தில் தார் சாலை, கால்வாய் அமைப்பு


ரூ.60 லட்சத்தில் தார் சாலை, கால்வாய் அமைப்பு
x

எலவம்பட்டி ஊராட்சியில் ரூ.60 லட்சத்தில் தார் சாலை, கால்வாய் அமைக்கும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சியில் முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் வேல்முருகன் வட்டம் பகுதியில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.21 லட்சத்தில் தார் சாலை, சேலத்தார் வட்டத்தில் 750 மீட்டர் தூரத்திற்கு ரூ.16.44 லட்சத்தில் கப்பி சாலை, குப்பகவுண்டர் பகுதியில் ரூ.15.25 லட்சத்தில் தார் சாலை, மைக்கா மேடு சுப்பிரமணியன் வீடு வரை ரூ.6.60லட்சத்தில் கால்வாய் அமைத்தல் என ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலரும், ஒன்றிய செயலாளருமான கே.ஏ.குணசேகரன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் ஜி.மோகன்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் சண்முகப்பிரியா கமலநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தன் உள்பட பலர் பேசினார்கள். மதுமதி, குமரேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெ.ராஜேஷ் நன்றி கூறினார்.


Next Story