நாமக்கல்லில் இருந்து பாடப்புத்தங்கள் அனுப்பும் பணி நிறைவு


நாமக்கல்லில் இருந்து பாடப்புத்தங்கள் அனுப்பும் பணி நிறைவு
x

பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி நாமக்கல்லில் இருந்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நிறைவடைந்தது.

நாமக்கல்

நாமக்கல்:

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மேலும் பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 60 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனுப்பும் பணி நிறைவு

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு பள்ளிகளில் தயார் நிலையில் உள்ளன. இதேபோல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து பாடப்புத்தகங்கள் கடந்த சில நாட்களாக அனுப்பப்பட்டு வருகிறது.

நாமக்கல் கல்வி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 87 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. கடைசி நாளான நேற்று கொல்லிமலையில் உள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 6 மற்றும் 7-ம் வகுப்பிற்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் மட்டும் வந்து இருப்பதாகவும், மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் ஓராண்டுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் வந்து விட்டன எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story