மது பார் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


மது பார் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். வெள்ளகோவில் நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் 5-வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் ஈரோடு ரோட்டில் கிழக்கு பகுதியில் நவீன குளிர்சாதன மதுபார் தொடங்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த கடை அருகில் 100 மீட்டர் தூரத்தில் அரசு தொடக்கப்பள்ளியும், பஸ் நிலையமும், அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. இந்த பள்ளிகளில் 800-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள்.

மின்வாரிய அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தினசரி மார்க்கெட், வாரச்சந்தையும் அருகில் உள்ளன. கடை அமைய உள்ள பகுதிக்கு அருகே 350 வீடுகள் உள்ளன. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு இந்த பார் தொடங்கப்பட்டு மக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் குளிர்சாதன வசதி கொண்ட பார் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.


Next Story