டாஸ்மாக் பார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
இலுப்பூரில் டாஸ்மாக் பார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை
இலுப்பூர் சீத்தாராமன் நாயுடு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 44). இவர் இலுப்பூரில் உள்ள டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக பாண்டியன் தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து இலுப்பூரில் உள்ள அரசு குடிசை மாற்றுவாரியத்தில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று பாண்டியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story