டாஸ்மாக் பாரில் திருடியவர் கைது
தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு சின்னகண்ணுபுரத்தில் டாஸ்மாக் மதுபான பார் உள்ளது. இந்த டாஸ்மாக் பாரில் புகுந்த மர்ம நபர், அங்கிருந்து பாரில் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.1000 மதிப்பிலான சிகிரெட் பாக்கெட்டுகளை திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் தூத்துக்குடி சோட்டையன் தோப்பை சேர்ந்த இசக்கி ராஜா (வயது 30) என்பவர் பாரில் திருடியது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் இசக்கிராஜாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story