டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
அம்பையில் டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அம்பை:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜயவீரன் (வயது 46). இவர் அம்பையில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் அம்பையில் குடியேறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை பார்த்து வந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்போவதாக கூறி அதனை அடைத்து விட்டனர்.
இதனால் விஜயவீரன் குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர் கடந்த 28-ந்தேதி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி விஜயவீரன் இறந்தார். இதுதொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.