டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு


டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு
x

பாளையங்கோட்டையில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. 6-வது மாவட்ட மாநாடு பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவன்ராஜ் வரவேற்று பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இதில் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் பொதுச்செயலாளர் திருச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மாநாட்டில் கடந்த 19 வருடங்களாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி 10 ஆண்டு கால ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மதுக்கூட ஒப்பந்தகாரர்களால் பரிந்துரைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செய்யப்பட்ட பணிமாற்றங்கள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சி.ஐ.டி.யு. மாவட்ட இணைச்செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் சரவணபெருமாள், இளமுருகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story