டாஸ்மாக் குடோனை ஓட்டல் பார் உரிமையாளர்கள் முற்றுகை


டாஸ்மாக் குடோனை ஓட்டல் பார் உரிமையாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 April 2023 1:00 AM IST (Updated: 22 April 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. இதனால் மதுபிரியர்கள் பிராந்தி, ரம், விஸ்கி போன்ற மதுவகைகளை தவிர்த்து பீர் பாட்டில் வாங்கி அருந்துவதை காண முடிகிறது. இதன் காரணமாக சேலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பீர் தட்டுப்பாட்டால் மதுபிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். டாஸ்மாக் குடோனில் இருந்து மதுக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பீர் வகைகள் அனைத்தும் ஒரே நாளில் விற்பனை ஆகிவிடுவதாக ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கண்ணாடி பீர் பாட்டில் (650 மில்லி) சப்ளை குறைந்துவிட்டதாகவும், அதற்கு பதில் டின் பீர் வகைகள் (500 மில்லி) விதவிதமாக சப்ளைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பீர் வகைகள் முறையாக சப்ளை செய்யப்படவில்லை என்று கூறி, சேலத்தை சேர்ந்த தனியார் ஓட்டல்களில் பார் நடத்தும் உரிமையாளர்கள் மல்லூர் அருகே சந்தியூரில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப கழக டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ஓட்டல்களில் செயல்படும் பார்களுக்கு முறையாக பீர் வகைகள் சப்ளை செய்யப்படுவதில்லை. இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறினர்.


Next Story