மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்


மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்
x

சேலம் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

மல்லூர் அருகே சந்தியூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜம்பு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, 22 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்தும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் பழனிசாமி, மாநில துணைத்தலைவர் மாயவன், சேலம் மாவட்ட பொருளாளர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story