திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6¼ கோடிக்கு மது விற்பனை


திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6¼ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 17 Jan 2023 12:45 AM IST (Updated: 17 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 20 லட்சத்துக்கு மது விற்பனை நடந்தது.

திருவாரூர்

பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 20 லட்சத்துக்கு மது விற்பனை நடந்தது.

பண்டிகை கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 108 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை கால கொண்டாட்டங்களையொட்டி மது விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும். கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என அனைத்து பகுதிகளில் உள்ள மதுக்கடைகளிலும் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் வழக்கத்ைத விட மது விற்பனை அதிகரித்தது.

மதுப்பிரியர்கள் உற்சாகம்

திருவாரூர் மாவட்டத்திலும் பொங்கல், மாட்டு பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை மதுப்பிரியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட முன்கூட்டியே திட்டமிட்டு மதுபாட்டில்களை வாங்கி குவித்தனர்.

நேற்று திருவள்ளுவர் தினம் என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் முன் எச்சரிக்கையாக நேற்று முன்தினமே போட்டி போட்டு மதுபாட்டில்களை வாங்கினர். இதன் காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.6 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பீர் மற்றும் மது வகைகள் விற்பனையானது. இது சராசரியாக நடைபெறும் மது விற்பனையை விட 2 மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.70 லட்சம் மதுவிற்பனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story