இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடை, பார்கள் அடைப்பு


இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடை, பார்கள் அடைப்பு
x

இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடை, பார்கள் அடைக்கப்படுகிறது.

திருச்சி

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, சொரத்தூர் முத்தையம்பாளையம், சாந்தமங்கலம், லால்குடி, மணக்கால், புத்தாநத்தம் கருமலை, தீராம்பாளையம், திருப்பைஞ்சீலி, பூனாம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் (பார்கள்) இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 3 நாட்களும் மூடப்பட்டு இருக்கும். அதுபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வருகிற 12-ந்தேதி துறையூர், லால்குடி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு இருக்கும். இதுதவிர மேற்கண்ட நாட்களில் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6) தவிர) உரிமம் பெற்ற மதுக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும். மேற்கண்ட நாட்களில், மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story