கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி மற்றும் 9-ந் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்கு உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் வருகிற 2 மற்றும் 9-ந் தேதிகளில் மூடப்படும்.
இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலோ, விற்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story