டாஸ்மாக் கடை ஊழியர் மர்ம சாவு


டாஸ்மாக் கடை ஊழியர் மர்ம சாவு
x

ராஜபாளையத்தில் டாஸ்மாக் கடை ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். மயானத்திற்கு சென்று உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் டாஸ்மாக் கடை ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். மயானத்திற்கு சென்று உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை ஊழியர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேட்டை ராமசாமி ராஜா தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). டாஸ்மாக் கடை ஊழியரான இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் விக்னேசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மர்ம சாவு

இந்தநிலையில் விக்னேஷ், அவரது மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளிேய வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை திறந்து பார்த்த போது அவரது கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரது உடலை மயானத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே விக்னேஷின் தாய் ராமலட்சுமி தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மயானத்திற்கு விரைந்து சென்று விக்னேசின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story