டாஸ்மாக் கடையில் கொள்ளை; கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே டேவிஸ்புரம் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த 6-ந்தேதி இரவு 10 மணியளவில் மேற்பார்வையாளர் சரவண பெருமாள் கடையை அடைத்து விட்டு சென்றார்.
மீண்டும் அவர் வழக்கம்போல் மறுநாள் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து உடனடியாக டாஸ்மாக் பொது மேலாளர் மற்றும் தாளமுத்து நகர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது, 2 வாலிபர்கள் கடைக்குள் புகுந்து கடையில் இருந்த மதுபாட்டில் பெட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
இந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் அந்த 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.
சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் வெளியான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.