டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்


டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
x

சிவகாசி அருகே நேருஜி நகரில் உள்ள டாஸ்மாக் கடைைய அகற்ற வேண்டும் என தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே நேருஜி நகரில் உள்ள டாஸ்மாக் கடைைய அகற்ற வேண்டும் என தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.

நேருஜிநகர்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் நேருஜிநகரில் அரசு டாஸ்மாக்கடை இயங்கி வருகிறது. இந்தநிலையில் இந்த கடைக்கு வருபவர்களால் அப்பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அதனால் இந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை சிவகாசி தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் தாசில்தார் லோகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.

24 மணி நேரம்

இதுகுறித்து நேருஜிநகரை சேர்ந்தவா்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் எப்போதும் வாலிபர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. பல்வேறு பகுதியில் இருந்து இங்கு மதுவாங்க வருபவர்களுக்கும், இப்பகுதி மக்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட மது அருந்திக்கொண்டிருந்த ஒரு வாலிபரை வெட்டி கொலை செய்து விட்டனர். இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பெண்கள் நடமாட முடியவில்லை. பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் பாதிக்கிறார்கள். எங்கள் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை உள்ளது. இதனை தடுக்க வேண்டும். இங்குள்ள மதுக்கடையை வேறு எங்காவது மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story